உரிமை கோரப்படாத 612 வாகனங்கள் 15 நாட்களுக்குள் உரிய ஆவணம் சமர்ப்பித்து பெறலாம் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட இடங்களில் உரிமை கோரப்படாத 612 வாகனங்கள் அனுப்பர்பாளையம் வெங்கமேடு மாதேஸ்வரன் கோவில் அருகிலும், ராயபுரம் கே.வி.ஆர். நகர் போலீஸ் உதவி ஆணையர் முகாம் அலுவலகம் அருகிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் காணாமல் போயிருந்தால் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் அனுப்பர்பாளையம் சரக அலுவலக அலைபேசி எண் 9487639220, கொங்குநகர் சரக அலுவலக அலைபேசி எண் 9498101302 மற்றும் கே.வி.ஆர். நகர் சரக அலுவலக அலைபேசி எண் 9498101301 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு பார்வையிட்டு தங்களது வாகனம் இருப்பின் 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை மாநகர போலீஸ் நிலையங்களில் சமர்ப்பித்து வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். 15 நாட்களுக்குப் பிறகு உரிமை கோரப்படாத வாகனங்கள் திருப்பூர் மாநகராட்சி மூலம் ஏலத்திற்கு விடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.