60 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் ரூ. 20ஆயிரம்அபராதம்விதிப்பு

திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட சாமுண்டி புரம் சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். இதில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. அங்கிருந்து 60 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோடு பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி