திருப்பூர் தெற்கு போலீசார் ரோந்து பணியின் போது தென்னம்பாளையம் அருகே காட்டுவளவு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஆறுமுகம் (55) மற்றும் சுரேஷ் (44) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், வடக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மாஸ்கோ நகரில் கேரளா லாட்டரி சீட்டு விற்ற அப்துல் ரகுமான் (70) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.