திருப்பூர், வீரபாண்டி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, வாய்க்கால்மேடு பகுதியில் நின்ற சிலரை சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து 1000 வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த முத்துபாண்டி, ராஜேஷ், ஹரிசங்கர், கணேஷ்குமார், தினேஷ் ஆகியோர் ஆன்லைன் மூலம் மாத்திரைகளை வாங்கி, போதை பயன்பாட்டிற்காக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.