திருப்பூர் வடக்கு போலீசார் ரெயில் நிலையம் பகுதியில், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜபரல் (வயது 25), மஜீத்(28), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீபன் தீக் பத்தியாலா(25), சின்னா பத்தியாலா(25) ஆகியோர் என்பதும், அவர்களிடம் மொத்தம் 10½ கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது