பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய ஈஸ்வரி (வயது 50), சங்கீதா (30) ஆகிய 2 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் விபச்சாரம் நடப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கிருந்த நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு அறையில் இளம்பெண்ணை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.