திருப்பூரில் தொழிலாளியிடம் செல்போனை பறித்த 3 பேர் கைது

திருப்பூர் கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி மருதுபாண்டி (28) யிடம், புதூர் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், திருப்பூர் சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பிருத்திவிராஜ் (24), அஜித் (23), அஸ்வின் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மருதுபாண்டியிடம் செல்போனை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி