திருப்பூரில், சூர்யா என்பவரிடம் செல்போன் பறித்ததாக கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த சச்சின் (21) மற்றும் வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21) ஆகிய இருவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர். கடந்த 26-ந்தேதி அறிவொளிநகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா வீட்டுக்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அவரை வழிமறித்து தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சூர்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைப் பிடித்தனர்.