திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பபுல்பலே (25) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக முகமது பர்கான் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.