கஞ்சா, புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்ற நிதிஷ் குமார் (18) என்பவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவையும், ரமேஷ் குமார் (21) என்பவரிடம் இருந்து 2 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி