திருப்பூர்: கடந்த ஆண்டில் 14 மருந்தகங்கள் உரிமம் ரத்து

தமிழகம் முழுவதும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் எந்த விதமான மருந்துகளும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பூரில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்பனை செய்த 14 மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஜனவரி மாதம் வரை மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மனநல மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து மருந்தகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில் கடந்த ஒரு ஆண்டில் மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்து விற்பனை செய்த 11 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாகவும், 3 மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி