ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் திருப்பூர் சட்டமன்ற தொகுதியாக இருந்த பகுதிகள் தற்போது திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் என 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2001 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2001 உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் 2002 திருத்தப்பட்டியலில் இல்லாததால், சுமார் 10 ஆயிரம் வாக்குகள் மாயமாகி உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.