கோவை: சிறுமி கொலை.. மேற்கு மண்டல ஐஜி பரபரப்பு பேட்டி

கோவை: சூலூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து ஐஜி ரம்யா பாரதி இன்று கூறியதாவது: சூலூரை சேர்ந்த 10 வயது சிறுமி மே.21 மாலை 5 மணியளவில் காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில், சிறுமியின் வீட்டருகே வசித்த கார்த்தி என்பவர் குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.  அவருக்கு உடைந்தையாக இருந்த மோகன் என்பவரும் கைது செய்யப்பட்டார். போலீசார் குழந்தையை தேடியபோது குற்றவாளியும் தேடுவதுபோல் நடித்தார் என்றார்.

தொடர்புடைய செய்தி