ஈரோடு: கற்பழிப்பு வழக்கில் கைதான வாலிபர் தற்கொலை

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள முள்ளம்பட்டி, வரவங்காட்டை சேர்ந்தவர் ரஞ்சித் (24). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த 50 வயது பெண் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து சென்ற அந்த பெண்ணை ரஞ்சித் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றபோது கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக காஞ்சிகோவில் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சித் தன் மீது அந்தப் பெண் பொய் புகார் கொடுத்து விட்டதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை எடுத்து அவரது உடல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது. இந்நிலையில் ரஞ்சித்தின் உறவினர்கள் உண்மை நிலையை விசாரித்து வழக்குப் பதிவு செய்யுமாறு கூறி ரஞ்சித்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் உடலை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி