பல்லடம்: சரக்கு வேன் மோதி பெண் பலி

பல்லடம் அருகே காளிவேலம்பட்டியைச் சேர்ந்த அகிலா (30) என்பவர், தனது சகோதரி காய்கறி வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிக் கடை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, மங்கலம் நோக்கிச் சென்ற சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அகிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி