உடுமலை: தக்காளியில் வைரஸ் நோய் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மருள்பட்டி கிராமத்தில் பருவநிலை மாற்றத்தால் தக்காளி பயிரில் வைரஸ் நோய் தாக்கியுள்ளது. 40 நாட்கள் வளர்ந்த செடிகள் பூக்கும் பருவத்தில் வைரஸ் தாக்கி மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 50 முதல் 60 ஆயிரம் வரை செலவழித்த நிலையில் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி