பல்லடம் அருகே மதுபோதையில் மருமகன் தாக்கியதில் காயமடைந்த காசியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம், முருகன் விபத்தில் காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், தாயாரைத் தாக்கியதாகக் கூறி காசியம்மாளின் மகன்கள் பழனிசாமி, பாண்டி ஆகியோர் தாக்கியதில் முருகன் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கொலையை மறைத்து விபத்து என நாடகமாடிய பழனிசாமி, பாண்டி ஆகிய இருவரையும் பல்லடம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.