திருப்பூர்: சிபில் ரிப்போர்ட் பார்த்தே கடன்.. அரசுக்கு சங்கம் கோரிக்கை

தமிழக கூட்டுறவு துறையின் மாநில பதிவாளர் சிவில் ரிப்போர்ட் சரிபார்த்த பிறகு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என கூட்டுறவு வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே விவசாயிகள் நல்ல விளைச்சல் லாபம் பார்த்த நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள் தேசிய வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திரும்ப செலுத்த முடியாமல் சிவில் ரிப்போர்ட் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள் கூட்டுறவு வங்கிகளை மட்டுமே அடுத்த விளைச்சலுக்கு காத்திருக்கும் நிலையில் கூட்டுறவு துறையின் மாநில பதிவாளர் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஏற்கனவே குறைவான கடன் மட்டுமே வழங்கும் நிலையில் மீதி தொகைக்கு உரக்கடை போன்ற பிற இடங்களில் கடன் பெறும் விவசாயிகள் இனி முழுமையாக தனியார் நிதி நிறுவனங்களிடம் சிக்கி தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்பதால் தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி