உடுமலை விநாயக கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல் பகுதியில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் இன்று ஆண்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓதி, ஓமம் வளர்க்கப்பட்டு, 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சித்தி புத்தி விநாயகர் உள்ளிட்ட கடவுள்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி