திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை பழனி மாவட்டத்துடன் இணைக்க கூடாது என்பது வலியுறுத்தியும் உடுமலையை மாவட்டமாக அறிவிக்க கோரி இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை (மார்ச் 20) கடையடைப்பு நடத்தப்படும் அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றது என இந்திய விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நீரா பெரியசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது