திருப்பூர்: தாய்ப்பாலை பாதியில் நிறுத்தாதீர் கர்ப்பிணிகளுக்கு வேண்டுகோள்

தாய்ப்பாலை பயந்து பாதியில் நிறுத்தாதீர்கள். பல்லடத்தில் கர்ப்பிணி பெண்களும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மேற்கு பல்லடம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு நல உதவி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது பேசிய திருப்பூர் மாவட்ட மருத்துவர்கள் சங்க தலைவர் ராஜ்குமார் அனைவரும் மத்தியில் பேசும்போது மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடவில்லை என்றாலும் தாய்ப்பால் ஊறுமே தவிர நிக்காது என்றும் தொடர்ந்து இருபது நிமிடங்கள் 24 மணி நேரத்தில் கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் பத்தியமோ, டயட்டோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதை வேண்டுமானாலும் நான்கு வேளையும் சாப்பிடலாம் என்று பேசினார். 

தொடர்ந்து பேசிய பெண்கள் அக்கம்பக்கத்தினரின் பேச்சைக் கேட்டு தன்னுடல் கெட்டு விடும் என்று நம்பி தாய்ப்பாலை பாதியில் விட்டு விடாதீர்கள் என்றும் அதனால் குழந்தைகள் திறமை குறைந்து ஆரோக்கியம் குறைவதாகவும் அதை தாங்கள் அனுபவத்துடன் கூறுவதாகவும் பேசியது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி