பொங்கலூர் அருகே ஆண்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகளுக்கு அருகில் மேலும் ஒரு கல்குவாரி அமைக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து மக்களின் கருத்து கேட்பு கூட்டம் பெருந்தொழுவில் நடைபெற்றது. இதில் திருப்பூர் ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மக்கள் தங்கள் எதிர்ப்பை மனுக்கள் மூலமாகவும், கூட்டத்திலும் பதிவு செய்தனர்.