பூமலூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (24) என்ற தனியார் நிறுவன ஊழியர், சாமளாபுரம் அருகே ஸ்கூட்டரில் சென்றபோது நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஹரிஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.