திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மின்பணியாளர் வீரராஜ் (31), சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.