பல்லடம்: 8 பவுன் சங்கிலி பறிப்பு.. பரபரப்பு

பல்லடம் அருகேயுள்ள கோவில்பாளையம் கிராமத்தில், 75 வயதான பொன்னம்மாள் என்பவர் தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி