திருப்பூர்: ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புகழ்பெற்ற 6ஆம் ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை துவக்கிவைத்தனர். 

சுமார் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை படித்து அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் உறுதிமொழிகளை முன்மொழிந்தார், மாடுபிடி வீரர்கள் வழிமொழிந்தனர்.

தொடர்புடைய செய்தி