பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருப்பூர் உடுமலை அருகே சோமவார்பட்டி ஊராட்சியில் உள்ள பெதப்பம்பட்டி 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மைய பகுதியாக உள்ளது மேலும் இங்கே ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், முன்மாதிரி அலுவலகம், பள்ளி கல்லூரிகள் அதிக அளவு உள்ளன. இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குடிமங்கலம் செல்ல வேண்டியுள்ளதால், பெதப்பம்பட்டியில் பொதுமக்கள் நலன் கருதி குற்ற செயல்களை தடுக்கும் விதமாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி