நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி பொங்கலூரில் உள்ள பி. ஏ. பி. அலுவலகம் முன்பு உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆனைமலையாறு- நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெற்றி தலைமை தாங்கினார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநகர் மாவட்டத் தலைவர் கோகுல் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அ. தி. மு. க. மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி