திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சில மாதங்களாக மர்ம நபர்களால் குப்பைகள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் புகைமூட்டத்தாலும், மாசுவினாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கோயமுத்தூர் ரோட்டிசர்ச்சை அருகே குப்பைகள் எரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மீண்டும் பாதிப்படைந்தனர்.