ஏற்கனவே விவசாயிகள் பயன்படுத்தி வந்த இந்த நிலங்களின் பட்டாதாரர் பெயரை நீக்கி தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உரிமையை பெறாமலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி சொத்தை சுவாதீனம் எடுக்காமலும் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ய தடை ஏற்படுத்தியுள்ளதாகவும், 16 ஏக்கர் நிலத்தினை ஏலம் விட இந்து சமய அறநிலை துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள இந்த நிலங்களை ஏலம் விடுவதை கண்டித்து நேற்று(செப்.24) அலகுமலை முருகன் கோயில் அடிவாரத்தில் திடீரென 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். ஏல அறிவிப்பை ரத்து செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து 500க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த இந்து சமய அறநிலைத்துறையின் சுப்பிரமணியம் என்பவரை சுற்றி வளைத்து விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.