தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதே போல பல்லடம் சேடபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜசேகரன் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். ராயர்பாளையம் நடுநிலைப் பள்ளியில் 6-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார். அம்மாபாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இமைகள் ரோட்டரி சங்கம் சார்பில் இனிப்பு மற்றும் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு