மடத்துக்குளம் பகுதியில் கத்தரிக்காய் விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனத்தில் ஆண்டு முழுவதும் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தாலும், உடுமலை தினசரி சந்தைகளில் கத்திரி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 25 கிலோ கொண்ட கத்திரி 700 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 300 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். பருவமழைக்குப் பிறகு சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. எனவே, கத்தரிக்காய்க்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி