இதனையடுத்து அவரை காவல்நிலையத்தில் இருந்து போலீசார் வெளியேற்ற முயற்சி செய்த போது போதையில் இருந்த பொன்ராஜ் அரை நிர்வாணமாக காவல் நிலையம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் நான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாதி ரீதியாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதை ஆசாமி அரை நிர்வாணமாக காவல் நிலையம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்