திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி இன்று பூத் வாரியாக ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வில் உடுமலை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் தமிழ்மறை மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்துவது மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.