நடுவேலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை நேரில் சந்தித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் எனவும் உங்கள் அனைவரையும் 11ஆம் வகுப்பில் சந்திக்கிறோம் எனவும் கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக நடுவேலம்பாளையம் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியில் இருந்து 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதற்காக மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் சால்வை அணிவித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர். மேலும் தங்களது கிராமத்தில் விளையாட்டு மைதானம், நூலகம் ஆகியவற்றை அமைக்க கோரி மனு அளித்தனர்.