நினைவு மண்டபத்திற்கு சென்று செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்ததை வரவேற்கிறேன். சீமான் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கான கேள்விக்கு சீமான் இங்கு ஒரு நியாயம் அங்கு ஒரு நியாயம் என பேசுவார் என்று தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் ஊழல் வழக்கின் நீதிமன்றமே இறுதி முடிவு எடுக்கும்.
பாரதிய ஜனதா கட்சி 11 ஆண்டுகள் ஆட்சியில் 21 கட்சியினை மிரட்டி பணிய வைத்துள்ளது. ஜனநாயகத்தை எவ்வளவு நாள் பாரதிய ஜனதா கட்சி அடைத்து வைக்கும் ஒரு நாள் நிச்சயம் ஜனநாயகம் வெல்லும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் பல்லடம் வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்