பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த ரேவதி மற்றும் தனலட்சுமி என்ற இரு தற்காலிக கணினி ஆபரேட்டர்கள், வீட்டு வரி ரசீது போட்டு தருவதாக விவசாயியிடம் ₹2,500 லஞ்சம் கேட்டனர். இது குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, விசாரித்த பல்லடம் பி.டி.ஓ. கனகராஜ், இருவரையும் உடனடியாக பணியில் இருந்து நீக்கினார். லஞ்சம் கேட்டது உண்மை என விசாரணையில் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.