அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 2 வாலிபர்களும் ரோட்டில் அமர்ந்து கொண்டு என்ன தப்பு செய்து விட்டோம், குடிப்பது தப்பு என்றால் ஏன் சாராய கடையை திறந்து வைக்கிறீர்கள் என்று போலீசாரிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது அவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யப்பன், மணிகண்டன், என்பது தெரிய வந்தது. குடிபோ தையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்