திருப்பூரில் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்தாலும், அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், தெருநாய் கடித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. ஜூலை முதல் டிசம்பர் வரை 9,669 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். வீட்டில் வளர்க்கும் நாய்கள் கடித்தாலும் சிகிச்சை அவசியம் என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.