இதில் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஒடிசாவை சேர்ந்த திலீப் ரானா, சினோராமு, சரத்லூகா மற்றும் திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்த பிரசாத் என்ற கும்பலை கைது செய்தனர். இதே போல் அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்குமார் ஷா மற்றும் பிரவீனா கவுண்டி என்ற வடமாநில தம்பதிகள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வடமாநில தம்பதிகள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த இரு கும்பலிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் 4 செல்போன்கள் மற்றும் 28000 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனையின் போது வடமாநில கும்பல் அடுத்தடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்