பல்லடம் அருகே சித்தம்பலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, போலீசார் அதிரடியாக புகுந்து சேவல் சண்டை நடத்திய மகேஷ் குமார், கிருஷ்ணகுமார், ஜீவானந்தம், மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 1,400 ரொக்கமும், 2 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.