பல்லடத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. 3 பேர் உயிர் தப்பினர்

உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த கார் பல்லடம் உடுமலை மெயின் ரோட்டில் புள்ளியப்பன் பாளையம் பிரிவு அருகே வந்தபோது திடீரென்று நின்றுவிட்டது. காரில் நிரம்பிய கேஸ் தீர்ந்துபோனதால் அதன் ஓட்டுனர் பெட்ரோல் மூலம் காரை இயக்க முயன்றுள்ளார். 

அப்போது திடீரென காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு காரில் இருந்த 3 பேர் அவசரமாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் மற்றும் பல்லடம் காவல்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்குள் காரின் பெரும்பகுதி கீழே எரிந்து சேதமாகியது. தீவிபத்து குறித்து பல்லடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி