பல்லடம்: புகையிலைப் பொருட்கள், கஞ்சா சாக்லெட் விற்ற 3 பேர் கைது

பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற குருவலட்சுமி மற்றும் முத்துகுமார் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 104 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தெற்கு பாளையம் பிரிவு அருகே கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த சர்வேந்தர் தாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி