திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சோழமாதேவி வடக்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி தவ்பிக் ராஜா(26). இவர் நேற்று முன்தினம் (மே 28) தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.