மடத்துக்குளம் பகுதியில் கார் மோதி பெண் பலி

மதுரை, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த உலக அழகி (48) தனது மகன் ராஜ்குமாருடன் எரு விற்பனைக்காக பொள்ளாச்சிக்குச் சென்றிருந்தார். சரக்கு வேனில் ஊர் திரும்பும் போது, மடத்துக்குளம் அமராவதி வாய்க்கால் பாலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதி படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி