உடுமலை அருகே கால்வாயில் தவறி விழுந்து காட்டு யானை பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில், தண்ணீர் குடிக்க வந்த 8 வயது ஆண் யானை ஒன்று தவறி விழுந்தது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் யானையால் மேலே வர முடியவில்லை. இதனால் யானை கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது. பின்னர், யானையின் உடல் திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர் பரிசோதனை செய்து, யானையை வனப்பகுதியில் புதைத்தனர்.

தொடர்புடைய செய்தி