திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பெருமாள்புதூர் சுற்றுலா பகுதியில் வாழை சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் இரவு பகல் நேரத்தில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு உள்ளதால், வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.