திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் உடுமலை பிரதான சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாகி உடுமலை சாலையில் செல்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.