திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் கணியூர் கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராஜவாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான இயக்கங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்சமயம் நீர் நிலைகள் மிக அருகில் கழிவுநீர் கால்வாய் மூலம் ராஜவாய்க்காலில் நேரடியாக கழிவுகள் கலக்கப்பட்டு வருவதால் நீர் மாசடைந்து வருகிறது. இதனால் பயிர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படுகிறது. அத்துடன் கழிவுநீரில் செழித்து வளரும் ஆகாயதாமரைகள் உருவாகி பாசனத்துக்கு இடையூறு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.