உடுமலை: அருவிக்கு 5-ம்தேதி அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த இரும்பு பாலம் சீரமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால், ஐந்தாம் தேதி அன்று பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி